இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் அட்டூழியம் : கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை

898

காஷ்மீரில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 காவலர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர் ஒருவர் உட்பட 4 பேர் நேற்று இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில், மாயமான 2 உயர் காவல் அதிகாரிகளும், காவலர் ஒருவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பயங்கரவாதிகளைத் தேடும் பணி ஷோபியான் மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், இந்திய ராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், தற்போது 3 காவலர்கள் கடத்தி சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.