துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..!

243

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆனந்த்னாக் அருகே கோக்கர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் 3 பேர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற வீரர்கள், பயங்கரவாதிகள் உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டிக்கொல்லப்பட்டார். மற்றவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம், குல்காம் மற்றும் புல்வாமாவில் அடுத்தடுத்து 3 காவலர்கள், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.