காஷ்மீரில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

குப்வாரா மாவட்டத்தில் நேற்று அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தீவிரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தநிலையில், காஷ்மீர் மாநிலம் சோபூர் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 2 பேரை சுட்டு வீழ்த்தினர். மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால் எல்லைப் பகுதியில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.