காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே சட்டப்பிரிவு 370 நீக்கம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

365

காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அந்த நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பாகிஸ்தானுடன் இந்தியா இனி பேச்சுவார்த்தை நடத்துமே ஆனால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக தான் இருக்கும் எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். பால்கோட் தாக்குதலைவிட பெரிய அளவிலான தாக்குதலை இந்திய நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி இருப்பது மூலம், பாலகோட்டில் இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது உறுதியாகிவிட்டதாகவும் ராஜ்நாத்சிங் சுட்டிக்காட்டினார்.