காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு ..!

1398

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற கடும் சண்டையில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர் அருகே உள்ள சத்பால் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீட்டில் மறைந்து இருந்த பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.