காஷ்மீர் வன்முறை: பலி எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு!

196

ஜம்மு, ஜூலை.25–
காஷ்மீரில் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து கடந்த 10-ம் தேதி முதல் அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பதற்றத்தை தணிக்க ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது பள்ளத்தாக்கு பகுதிகளில் படிப்படியாக அமைதி திரும்ப தொடங்கி உள்ளது.
இதையடுத்து பந்திப்போரா, பாரமுல்லா, பட்காம் மற்றும் கந்தர்பல் மாவட்டங்களில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த மாவட்டங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே ஸ்கிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த பந்திப்போராவை சேர்ந்த முதாசிர் அகமது ஷா என்ற போலீஸ்காரர் நேற்று உயிரிழந்தார். இத்துடன் காஷ்மீர் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.