காஷ்மீரில் கடும் உறைபனி : பாதை மாறி தவித்த மக்கள்

208

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடும் உறைபனி படர்ந்து காணப்பட்டது. கடும் பனியால் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களில் உறை பனி சூழ்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது. சாலைகளில் பனி படலம் படர்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவகர் கணமாய் பகுதி பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்களில் வந்த 300-க்கும் மேற்பட்டோர் பாதை தெரியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று

அவர்களை மீட்டனர்.