கரூர் மாணவர் முஹம்மது ரிபாத் ஷாருக் தயாரித்த “கலாம் சாட்” எனப்படும் உலகின் மிகச்சிறிய செயற்கை கோளை நாசா விண்ணில் செலுத்தியது.

610

கரூர் மாணவர் முஹம்மது ரிபாத் ஷாருக் தயாரித்த “கலாம் சாட்” எனப்படும் உலகின் மிகச்சிறிய செயற்கை கோளை நாசா விண்ணில் செலுத்தியது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த முகம்மது பாருக்கின் முகம்மது ரிபாத் ஷாருக். 17 வயதே ஆன இவர் 12 ஆம் தேர்ச்சி பெற்று சென்னை புதுக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். விண்வெளியில் நிலவும் வெப்பம், சூழல், கதிர்வீச்சு ஆகியவற்றால், செயற்கைக் கோள் அடையும் மாற்றம் குறித்து கண்டறிய 64 கிராம் எடையுள்ள கையடக்க செயற்கைகோளை அவர் வடிவமைத்தார். இந்த செயற்கைகோளுக்கு அவர் கலாம் சாட் என்று பெயரிடப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட மிகச்சிறிய இந்த செயற்கைகோள் அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி மையம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.