கரூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது மணல் லாரிகளை போலீசார்….

294

கரூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது மணல் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பொள்ளாச்சி வழியாக, மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார், உடுமலை, ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த மணல் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் முறையான ஆவணங்கள் இன்றி கேரளாவுக்கு மணல் கடத்தி சென்ற 9 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.