போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

268

போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
கரூர் மாவட்டத்தில் உள்ள 5 கிளைகளில் இருந்து 80 சதவீத பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மீதம் உள்ள பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள், தற்காலிக ஓட்டுநர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். இருப்பினும் பேருந்துகள் நிரந்தரமாக இயங்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் 70 சதவீத பேருந்துகள் வழக்கம் இயங்குகின்றன. சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மீதமுள்ள அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். இதனால் விரைவில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.