கரூர் அருகேயுள்ள கன்னிமார் கோவில் சுனை நீர், அனைத்து நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுவதால், பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

276

கரூர் அருகேயுள்ள கன்னிமார் கோவில் சுனை நீர், அனைத்து நோய்களையும் தீர்ப்பதாக நம்பப்படுவதால், பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கரூர் – ஈரோடு ஓலப்பாளையம் உப்புபாளையம் பிரிவு சாலையில் அமைந்துள்ளது, கன்னிமார் கோவில். பழமை வாய்ந்த இந்த கோவிலில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக திடீரென ஏற்பட்ட இடியால் பாறை பிளந்து நீரோட்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தேவர்கள் வந்து நீராடியதாகவும், அந்த நீரைப்பருகியதாகவும் அப்பகுதி முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
அருகன் என பெயர் பெற்ற இந்த சுனை நீரை பருகுவதால், தீராத காய்ச்சல், தலைவலி, மனநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களும் தீருவதாக நம்பப்படுகிறது. இதனால், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து இந்த சுனை நீரை எடுத்துச் செல்கின்றனர்.