அரசியல் தலைவர்கள் குறித்து பேச நடிகர்களுக்கு தகுதி இல்லை – துணை சபாநாயகர் தம்பிதுரை

124

அரசியல் தலைவர்களை குறித்து பேசுவதற்கு நடிகர்களுக்கு தகுதி இல்லை என்று மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்று விட்டதாக முதல்வரே தெரிவித்திருப்பதால், இதுகுறித்து கருத்து சொல்ல முடியாது என்றார். அரசியல்வாதிகள் சரியில்லாததால், நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக விஷாலின் கருத்துக்கு பதில் அளித்த தம்பிதுரை, நடிகர்கள் நடிப்போடு இருக்கட்டும் என்று தெரிவித்தார். அரசியல் தலைவர்களை குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்றும் விமர்சித்தார்.