கரூரில் மீண்டும் தலைதூக்கிய ஒருதலை காதலால், பள்ளி மாணவி ஒருவர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

287

கரூரில் மீண்டும் தலைதூக்கிய ஒருதலை காதலால், பள்ளி மாணவி ஒருவர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். திண்டுக்கல்லில் உள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்துவரும் இவர், அதே கடவூர் பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவி ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி, திடீரென எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், சுரேஷை போலீசார் கைது செய்தனர். 4 பிரிவுகளின் கீழ் சுரேஷ்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.