உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் சீமை கருவேல மருங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

236

சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற, உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி, முதற்கட்டமாக கரூர் நகராட்சிக்குட்ட பகுதிகள், மற்றும் தாந்தோன்றி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜே.சி.பி . மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கியது. இப்பணிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், பார்வையிட்டார் . அப்போது பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மரங்களை அகற்றும் பணிகளில் ஏராளமான நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.