ஐ.பி.எல் போட்டிகளுக்கு பிறகு, பள்ளி மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகமானதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தெரிவித்துள்ளார்.

260

கரூரை அடுத்த புலியூரில் செட்டிநாடு பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், இந்திய அணி கேப்டனாக விராத் கோலி சிறப்பாக செயல்படுவதாக கூறினார். வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் ராபின்சிங் தெரிவித்தார்.