கரூர் அருகே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

195

கரூர் அருகே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் 30 வயதுமதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் நகர காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தவர் பசுபதிபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி என்பது தெரியவந்தது. படுகாயத்துடன் சடலம் மீட்கப்பட்டதால் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.