கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்ணொளி மருத்துவ முகாமை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்..!

347

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்ணொளி மருத்துவ முகாமை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார்.
கரூரில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவித்தொகை பெறும் 50 முதியோருக்கு கண்ணொளி வழங்கும் திட்டத்தின் கீழ், சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முகாமை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கிவைத்தார். மேலும், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட முதியவர்களுக்கு போர்வைகள், பழங்கள், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.