கரூரில் தேசிய கைத்தறி தின விழாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

320

கரூரில் தேசிய கைத்தறி தின விழாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் இரண்டாவது தேசிய கைத்தறி தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கைத்தறி விழா நடத்தப்படுகிறது. கரூர் வெங்கமேட்டில் உள்ள நெசவாளர் பொது வசதி மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோவித்தராஜன் தலைமையில் கைத்தறி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேலும் நெசவாளர்களுக்கு முத்ரா கடன் அட்டைகளையும், தறி உபகரணங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.