லாரி வேலை நிறுத்தத்தால் கிரில் வெல்டிங் பட்டறைகள் பாதிப்பு..!

175

லாரி வேலை நிறுத்தம் காரணமாக கரூர் மாவட்டத்தில் கிரில் வெல்டிங் தொழில் முடங்கியுள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கிரில் வெல்டிங் அசோசியேஷனைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிரில் வெல்டிங் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கே வீடுகளுக்கு தேவையான ஜன்னல், கதவு மற்றும் நிறுவனங்களுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது லாரிகள் வேலை நிறுத்தத்தினால் கிரில் வெல்டிங் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களும் வேலையின்றி அவதிப்படுகின்றனர். எனவே லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கிரில் வெல்டிங் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.