தமிழக பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் நடத்தப்படும் கிராமத்து சமையல் உணவுத் திருவிழா கரூரில் தொடங்கியுள்ளது.

466

தமிழக பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் நடத்தப்படும் கிராமத்து சமையல் உணவுத் திருவிழா கரூரில் தொடங்கியுள்ளது.

அழிந்து வரும் நாகரீக உலகத்தில் பாஸ்ட் புட் உணவு வகைகளிலிருந்து மக்களை காக்கும் வகையிலும், கிராமிய உணவினை மேம்படுத்தும் வகையிலும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் உணவு திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில், மாவட்ட ஆட்சியர் காக்கர்லா உஷா தலைமையில் உணவுத்திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கிராமத்து பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் வரகு, சாமை, கேழ்வரகு, திணை, சோளம் உள்ளிட்ட பல வகை தானியங்கள் மற்றும் விவசாய பொருட்களினால் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் கீரை, தானியங்கள், வாழை உள்ளிட்ட பொருட்களினால் செய்யப்பட்ட பலகாரங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கிராமப்புர பாரம்பரிய உணவுத்திருவிழா குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.