கரூரில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.

386

கரூரில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
கரூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவாக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் கரூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. பார்வையற்றவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில், பால்ரஸ் குண்டுகள் அடங்கிய சிறப்பு பந்துகள் பயன்படுத்தப்பட்டன. பந்து உருண்டு வரும் சத்தத்தை மட்டுமே கேட்டு, வீரர்கள் சிறப்பாக விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்து, வியப்பின் உச்சத்திற்கே கொண்டுசென்றன.