கரூரில் பாஜக, வி.சி.-க்கள் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு !

325

கரூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை முற்றுகையிட்டு, விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
மெர்சல் படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை நீக்குவது தொடர்பாகவும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழிசையை கண்டித்து, பாஜக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷமிட்டனர். இதற்கு பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு உருவானது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். ice_screenshot_20171024-162241