கரூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வில் வித்தை போட்டி

92

கரூரில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ – மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ – மாணவிகளுக்கான வில் வித்தை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 8 வயது முதல் 14 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள், மாநில அளவில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று பயிற்சியாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.