கரூரில் காவலாளிகளை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

277

கரூரில் காவலாளிகளை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் அருகே தனியார் பால் பண்ணையில் கடந்த 2ம் தேதி, பணியில் இருந்த 3 காவலாளிகளை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். விடுவிக்க 50 கோடி வரை பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பால் பண்ணை உரிமையாளர் சாமியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய அன்பரசன், அப்துல்லா, நீதிராஜா, விக்னேஸ்வரன், விஜயரகுநாத் மற்றும் வீரபாண்டி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் தேனியை சேர்ந்த சுரேஷ், கொளதமன் மற்றும் வீரப்பன் ஆகிய 3 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.