கரூரில் ஆடிப்பெருக்கையொட்டி வேம்பு மாரியம்மனுக்கு 27 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது.

326

கரூரில் ஆடிப்பெருக்கையொட்டி வேம்பு மாரியம்மனுக்கு 27 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஆடி மாதத்தையொட்டி அம்மன்கோயில்களில் சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுயம்பு வேம்பு மாரியம்மனுக்கு ஆடி வெள்ளியையொட்டி 27 லட்சம் மதிப்பிலான தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. 10, 20, 50,100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை மாரியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.