கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.

216

கரூர் மாவட்ட ஆட்சியர் காக்கர்லா உஷா தலைமையில் மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஒவ்வொரு துறை அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசனைகள் வழங்கினார். இதில், வருவாய் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். போக்குவரத்து துறை அமைச்சராக விஜயபாஸ்கர் பதவியேற்றப்பின், பங்கேற்கும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.