டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

0
152

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர்களாக 11 பேரை நியமித்து தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை பிறப்பித்தது. ஆனால், உறுப்பினர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 11 பேரின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளனர். மேலும், உறுப்பினர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், நீதிபதி ராமமூர்த்தியை தவிர மற்ற உறுப்பினர்கள் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY