குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை..!

157

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுத்த அமைச்சர் கருப்பணனை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிலையில், காலனி பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததால் கழிவு நீர் செல்லாமல் தேங்கியிருந்தது. சுகாதாரமற்ற முறையில் தேங்கியிருந்த கழிவு நீரால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட்டன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் கருப்பணனிடம் முறையிட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து ஒப்பந்ததாரரிடம் கூறி முறையாக கழிவு நீர் செல்ல நடவடிக்கை மேற்கொண்டார். இதனைக் கண்ட அப்பகுதிவாழ் மக்கள் அமைச்சரை பாராட்டினர்.