காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் – கருணாஸ்

351

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது 6 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தம்மை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.மேலும், காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப் பார்க்குமாறு சவால் விடுத்தார். ஊடகங்களில் தாங்கள் தரும் செய்திகளை எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை என்றும் அந்த ஊடகங்களை நாடார்களும் பிராமின்களும் நடத்துவதால்தான் இந்த நிலை என்றும் ஆவேசமாக பேசினார்.

மேலும் கொலைமிரட்டல் விடுக்கும் விதமாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைத்தல், இரு பிரிவுகளிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.