சென்னை அப்போலோ மருத்துமனைக்கு வருகை தந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் .

269

சென்னை அப்போலோ மருத்துமனைக்கு வருகை தந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் .
முன்னதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனை வந்த நடிகர் கருணாஸ், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத்தந்தது முதலமைச்சர் ஜெயலலிதா தான் என தெரிவித்தார். ஆட்சியில் இருந்தபோது திமுகவினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை பங்கேற்காது என்றும் அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து நடிகை லதா அப்போலோ வருகை தந்து முதலமைச்சரின் உடல் நலம் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார்.
பின்னர் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி அப்போலோ வருகை தந்தார். மருத்துவமனையில் அவர் முதலமைச்சர் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது. முதலமைச்சர் உடல் நலம் தேறி வருவதாகவும், அவர் விரைவில் உடல் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திப்பதாகவும் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
முன்னதாக, சிங்கப்பூர் துணை பிரதமரின் ஆலோசகர் ஜோஷ்வா சென்னை அப்பல்லோவுக்கு வருகை தந்துள்ளார். மருத்துவர்கள், மூத்த அமைச்சர்களை சந்தித்து முதல்வர் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிய தனிப்பட்ட முறையில் அப்பல்லோ வந்ததாக ஜோஷ்வா பேட்டியளித்துள்ளார்.