நவம்பர் ஒன்றாம் தேதி தனது கொள்ளுபேரன் திருமண விழாவை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்…!

319

நவம்பர் ஒன்றாம் தேதி தனது கொள்ளுபேரன் திருமண விழாவை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சுவாசப் பிரச்சனை காரணமாக தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் கருணாநிதியால் பேச இயலவில்லை. தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கடந்த வாரம் முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார்.
இதேபோன்று, தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தனது மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷதாவுக்கும் நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் நடைபெறும் திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்க உள்ளார். ஒராண்டுக்கு பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.