மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அரசியல் கட்சியினர் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

125

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அரசியல் கட்சியினர் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் இயல்பாக சுவாசிப்பதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பழ.கருப்பையா உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.