கருணாநிதி மறைவை அடுத்து, சென்னை கோபாலபுரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மாலை முரசு குழுமங்களின் நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் இன்று நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி குடும்பத்தினர் மற்றும் அ.ராசா உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துள்ளனர். இதேபோல் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கோபாலபுரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற மாலை முரசு குழுமங்களின் நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.