கருணாநிதி வீடு முன் குவிந்த தொண்டர்களை கலைக்கும் வகையில் இழுத்து மூடப்பட்ட கருணாநிதி வீட்டின் கதவு..!

359

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களை கலைக்கும் வகையில், 12:20 மணிக்கெல்லாம் அவரது வீட்டின் கதவு இழுத்து மூடப்பட்டது.

கருணாநிதி உடல் நிலை குறித்த தகவலை கேள்விப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு, இரவு 11.30 மணிக்கெல்லாம் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு புறப்பட்டார். ஆனால், நேரம் அதிகரிக்க தொண்டர்கள் கூட்டமும் அதிகரித்ததால் அங்கு பரபரப்பு ஓயாமல் இருந்தது. இந்த நிலையில், கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் கோபாலபுரத்திலிருந்து கலைந்து செல்லுமாறு திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும், தொண்டர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல், முழக்கமிட்டவாறு நின்றனர். இதையடுத்து இரவு 12.20 மணியளவில் கோபாலபுரம் வீட்டின் இரும்பு கேட் இழுத்து பூட்டப்பட்டு வாசலில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டன. இதனால் சிலரை தவிர பெரும்பாலான தொண்டர்கள் சிறிது சிறிதாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.