கருணாநிதி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்

416

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், திமுக தலைவர் கருணாநிதி மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாலை கோபாலபுரம் சென்று வந்ததாக கூறிய அவர், கடந்த சில நாட்களாக இருந்த அதே உடல் நிலையில் தான் கருணாநிதி தற்போதும் இருப்பதாக அவர் விளக்கமளித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், வதந்திகளை நம்ப வேண்டாம், என வேண்டுகோள் விடுத்துள்ளார்.