தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

211

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக்கூட்டத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் சென்னை லயோலா கல்லூரி அரங்கில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்புக்கருதி பொதுக்குழுக்கூட்டத்துக்கு லயோலா கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து, தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் என அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் இரண்டு மணியளவில்
பொதுக்குழுக்கூட்டம் தொடங்கியது. அப்போது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு தரப்பினர் பொதுக்குழுவில் பங்கேற்க தங்களை அனுமதிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும்
மோதலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்த மோதலில் நடிகர் சங்கத்துணைத்தலைவர் கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த கைகலப்பில்
ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கைகலப்பில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.