அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேச்சு : அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்

280

தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கருணாநிதி மறைவுக்குப்பிறகு, திமுக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தனது முதல் ஆர்ப்பாட்டத்தை சேலம் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தினார். செப்டம்பர் 18-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஊழல் செய்வதில் யார் சிறந்தவர் என்ற போட்டி வைத்தால், அனைத்து அதிமுகவினரும் முன்னிலையில் இருப்பார்கள் என்று கூறினார். மேலும், தைரியமிருந்தால், தாம் பேசியதில் தவறு இருந்தால். வழக்கு போடட்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஸ்டாலின் பேசியதாக அரசு வழக்கறிஞர் தனசேகரன் 2 பிரிவுகளின் கீழ் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அவதூறு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.