கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

250

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரும்பு விவசாயிகளுக்கு, அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான, ஆயிரத்து,589 கோடி ரூபாயை வழங்க வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனிக்கும் கரும்பை விளைவிக்கும் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை, கசப்பாக மாறி விட்டது என வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை தமிழக அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்திய அவர், அனைத்து சர்க்கரை ஆலைகளும் லாபத்தில் இயங்கும் போது கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையினை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையில் கசப்பை நீக்கி, இனிப்பை நிறைக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.