கார்த்தி சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

284

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்திக் சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கான அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி பெற்றுத் தந்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மே மாதம் சி.பி.ஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையத்திற்கும் லுக் அவுட் சுற்றறிக்கையும் உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. கார்த்திக் வெளிநாடு சென்றால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்த, அவர் வெளிநாடு தப்பித்து செல்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 7 -ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.