கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதித்த தடையை நீக்கக்கோரி மனு..!

233

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,