கார்த்தி சிதம்பரத்தின் 1 புள்ளி 16 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

733

கார்த்தி சிதம்பரத்தின் 1 புள்ளி 16 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 2006ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி வழங்கியிருந்தார். இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வெளிநாட்டு முதலீட்டுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்தநிலையில், ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 1 புள்ளி 16 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.