தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளே மாநில தலைவரை தேர்ந்தெடுக்க மேலிடம் அனுமதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

257

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளே மாநில தலைவரை தேர்ந்தெடுக்க மேலிடம் அனுமதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்பவரை மாநிலத் தலைவராக மேலிடம் நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கார்த்தி சிதம்பரம், மாவட்ட தலைவர் செழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.