ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு ..!

617

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராகி அவர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நேரில் ஆஜராகவேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.