கற்பழிப்பு வீடியோக்கள் தொடர்பான வழக்கு | வாட்ஸ்அப் நிறுவனம் பிரதிவாதியாக சேர்ப்பு

729

கற்பழிப்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பான வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனத்தை பிரதிவாதியாக சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பிரஜ்வாலா என்ற தொண்டு நிறுவனம், பென்டிரைவில் பதிவு செய்யப்பட்ட 2 கற்பழிப்பு வீடியோக்களுடன் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்நிலையில், நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, இந்த வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனத்தை பிரதிவாதியாக சேர்த்துக் கொண்ட நீதிபதிகள், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்