கர்நாடக வன்முறை சம்பவங்களில் தமிழக பேருந்துகள் எரித்தது தொடர்பான வழக்கு… 22 வயது இளம் பெண் உட்பட 11 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை

220

கர்நாடகாவில் தமிழக பேருந்துகளை எரித்தது தொடர்பாக 22 வயது இளம் பெண் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடாக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. தமிழக அரசுக்கு எதிராக பெங்களூருவில் பேரணி நடத்திய கன்னட அமைப்பினர், வன்முறையிலும் ஈடுபட்டனர். வாகனங்களை சூறையாடிய கன்னட வெறியர்கள், பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவெண் கொண்ட 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். இதுதொடர்பாக 11 பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் 22 வயதான பெண் பாக்யாவும் ஒருவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் அந்த பெண் தினக்கூலியாக வேலை பார்த்து வருவதும், தமது பெற்றோருடன்
பெங்களூருவில் உள்ள கிரிநகரில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து
அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.