டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் – கர்நாடக அரசு

165

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெங்களூருவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஆணையத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடவும் முடிவு செயப்பட்டது. 2-ம் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.