எடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!

161

கர்நாடகாவில் எடியூரப்பா அமைச்சரவையில் ஜெகதீஷ் ஷெட்டார் உள்ளிட்ட 17 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

கர்நாடகாவில் கடந்த 25 நாட்களாக தனியாக ஆட்சி நடத்தி வந்த எடியூரப்பா, டெல்லியில் கடந்த 16ஆம் தேதி அமைச்சரவை பட்டியலை மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளார். இதனையடுத்து, பெங்களூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஜெகதீஸ் ஷெட்டர், சோமண்ணா, ஈஸ்வரப்பா, ஸ்ரீராமலு, பசவராஜ் பொம்மை, சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உள்ளிட்ட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ம் தேதி கர்நாடகா முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.