கர்நாடக ஆளுனரின் நடவடிக்கை ஒரு ஜனநாயக படுகொலை – திருமாவளவன் கருத்து

636

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அனுமதி தந்த ஆளுனரின் நடவடிக்கை ஜனநாயக படுகொலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரால், எந்த அணியால் ஆட்சியமைக்க முடியுமோ அவர்களை அழைக்க வேண்டியது சட்ட நடைமுறை என்று தெரிவித்தார். ஒருதலை பட்சமாக பாஜகவை ஆட்சியமைக்க ஆளுனர் அழைத்திருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என அவர் கூறினார். இதன் மூலம், ஆளுனர்களை மத்திய அரசு எந்த அளவிற்கு எடுபிடிகளாக வைத்துள்ளது என்பதை புரிந்துக்கொள்ளலாம் என்று திருமாவளவன் தெரிவித்தார். இது ஜனநாயகத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக கூறிய அவர், தமிழகத்தில் அதிமுக சிவப்புக்கம்பளம் விரித்தாலும், பாஜகவுக்கு வாய்ப்பு கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.