கர்நாடக அரசு தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-வைகோ வேண்டுகோள்!

382

கர்நாடக அரசு தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பெங்களூருவில் வெளியானபோது, நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தமிழ்திரைப்படங்களை திரையிடக் கூடாது என்றும்,
தமிழர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றும் கன்னட அமைப்புகள் கூறியிருப்பது வருத்தத்துடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர்கள் மீது வெறுப்பை விதைத்து வரும் கன்னட அமைப்புகள், தமிழ் திரைப்படங்களை திரையிட கூடாது என கலவரத்தில் ஈடுபடுவதை தடுத்து, தமிழர்களை பாதுகாத்திட வேண்டுமென கர்நாடக அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.