கர்நாடகா முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

199

கர்நாடகா முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கோவா, மகாராஷ்ட்ரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஓடும் மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகள் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நதியில் இருந்து குடிநீர் தேவைக்காக ஏழு டி.எம்.சி. தண்ணீரை கொண்டுவர அனுமதிக்கோரி கர்நாடகா தாக்கல் செய்த மனுவை நடுவர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதைக்கண்டித்து கர்நாடகாவில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு, அம்மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள், கர்நாடகா திரையுலகம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி கர்நாடகா முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகநிறுவனங்கள், திரையங்குகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 270 அரசுப்பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.